Skip to main content
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியால் திருமணம் ரத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியால் திருமணம் ரத்து

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியால் திருமணம் ரத்து

(படம்: REUTERS/Henry Romero)

வெளியீடு : 29 May 2026 02:50PM புதுப்பிப்பு : 29 May 2026 03:03PM
திருமணம் ரத்து... காரணம்?

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் விளையாட கிடைத்த வாய்ப்பு!

நியூஸிலந்தின் உலகக் கிண்ணக் காற்பந்து அணியில் விளையாட கோல் காவலர் (goalkeeper) மைக்கல் வூட் (Michael Woud) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்ற ஆண்டு அவருடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

(2026) வரும் ஜூன் 11 - ஜூலை 19ஆம் தேதிகளுக்கு இடையே திருமணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அப்போதுதான் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியும் நடைபெறவுள்ளது.

காற்பந்தின் ஆகப் பெரிய போட்டியில் பங்கெடுப்பதற்காகத் திருமணத்தை ரத்து செய்வது தவறாகப்படவில்லை என்றார் திரு வூட்.

தமது காதலியும் அதற்கு ஆதரவளித்ததாக அவர் சொன்னார்.

4 ஆண்டுக்கு ஒரு முறைதான் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறும்... திருமணத்தை அடுத்த ஆண்டு நடத்திக்கொள்ளலாம் என்றார் 27 வயது வூட்.

அடுத்த மாதம் தொடங்கவுள்ள போட்டியில் மொத்தம் 48 அணிகள் களமிறங்குகின்றன.

அதன் மதிப்பீட்டுப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணி நியூஸிலந்து.

அது ஈரான், எகிப்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் பொருதவுள்ளது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்