Skip to main content
பாரபட்சம் இல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

பாரபட்சம் இல்லை - FIFA தலைமை நடுவர் அறிவிப்பு

வாசிப்புநேரம் -
பாரபட்சம் இல்லை - FIFA தலைமை நடுவர் அறிவிப்பு

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அர்ஜென்டினாவும் எகிப்தும் பொருதிய ஆட்டத்தில் நடுவர் (Referee) பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை என்று FIFA நடுவர்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த ஆட்டத்தில் 3-2 எனும் கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின்போது நடுவர் எடுத்த பல முடிவுகள் குறித்து குறைகூறல்கள் எழுந்தன.

நடுவர் எகிப்துக்கு எதிராகச் செயல்பட்டதாக எகிப்திய ரசிகர்கள் பலரும் கூறினர்.

எகிப்து அணி நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக அதன் பயிற்றுவிப்பாளர் ஹொஸாம் ஹசன் (Hossam Hassan) தெரிவித்தார்.

அர்ஜென்டினா போட்டியில் தொடர வகைசெய்ய நடுவர் நெருக்குதலைச் சந்தித்திருக்கலாம் என்று அவர் சொன்னார்.

FIFA நடுவர்களின் தலைவர் பியர்லூய்கி கொலினா (Pierluigi Collina) குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

"FIFA உலகக் கிண்ண ஆட்டத்தின் அதிகாரிகளின் உன்னதத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது..."

FIFA தலைவர் உட்பட யாராலும் நடுவர்களின் முடிவில் தலையிட முடியாது என்றார் அவர்.

ஆட்டம் பெரும்பகுதி வரை 2-0 எனும் கோல் கணக்கில் எகிப்து முன்னிலை வகித்தது.

அது அடித்த இன்னொரு கோல் அனுமதிக்கப்படவில்லை.

கடைசி சுமார் 15 நிமிடத்தில் 3 கோல்களைப் போட்டு அர்ஜென்ட்டினா வெற்றி பெற்றது.

அது அடுத்து சுவிட்சர்லந்தைச் சந்திக்கும்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்