Skip to main content
Offside என்றால்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

Offside என்றால்?

வாசிப்புநேரம் -
Offside என்றால்?

Envato Elements

வெளியீடு : 16 Jun 2026 06:19PM புதுப்பிப்பு : 17 Jun 2026 11:08AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காற்பந்தாட்டங்களில் திடீரென ஓர் அருமையான கோல் விழும்.

எல்லாரும் கொண்டாடி முடிப்பதற்குள் 'linesman' கையில் இருக்கும் கொடியை உயர்த்துவார்.

உடனே, 'ஐயோ offside' என்று ஒட்டுமொத்தக் கூட்டமும் தலையில் கை வைக்கும்.

"பந்து வலைக்குள்தானே சென்றது. பிறகு ஏன் அது கோல் இல்லை என்று சொல்லப்படுகிறது?" என்ற குழப்பமும் வரும்.

அதற்கு காரணம் 'Offside' கோல் விதி.
 
Related article image
envato elements
'Offside' என்றால்?

கோல் கம்பத்துக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டு ஏமாற்றக்கூடாது என்பதுதான் இந்த விதியின் அடிப்படை.

பொதுவாகக் கோல்காவலர்தான் கடைசி ஆளாக இருப்பார்.

அவருக்கு முன் இருக்கும் கடைசித் தற்காப்பு ஆட்டக்காரரைத் தாண்டி ஓர் எதிர் அணி ஆட்டக்காரர் நிற்கக்கூடாது.

ஓர் ஆட்டக்காரர் 'Offside Position'இல் நிற்பது தப்பில்லை.

ஆனால் அணியைச் சேர்ந்த சக ஆட்டக்காரர் பந்தை உதைக்கும் அந்த நொடியே அவர் 'Offside'லிருந்து நகர்ந்து விட வேண்டும்.

இதற்கு ஒரே அணியில் உள்ள இரு ஆட்டக்காரர்களை உதாரணமாக எடுத்துக்கொள்லாம்.

ஒருவர் A; மற்றவர் A1.

A மத்திய திடலின் மறுபக்கத்திலிருந்து பந்தை உதைக்கும்போது A1 எதிரணியின் தற்காப்பு வீரர்களைத் தாண்டி நிற்கக்கூடாது.

கோல் கம்பத்துக்கு அருகிலும் நிற்கக்கூடாது.

A பந்தை உதைத்த அந்த நொடியே A1 அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட வேண்டும்.

அப்படி நகராமல் அங்கேயே நின்றுகொண்டு வருகின்ற பந்தைக் கம்பத்துக்குள் புகுத்தினால் அது 'Offside' கோல்.

இந்த 'offside' விதி நேற்று இன்று வந்ததல்ல.

1863இல் இங்கிலாந்தில் காற்பந்து விளையாட்டுக்காக முதன்முதலில் விதிகள் எழுதப்பட்டபோதே வந்துவிட்டது.
Related article image
Envato Elements
எதனால்?

தொடக்கத்தில் எல்லா ஆட்டக்காரர்களும் கோல் கம்பம் அருகிலேயே நின்றுகொண்டு விளையாடினார்கள்.

மிக எளிதாகக் கோல் போட்டனர்.

அதில் சுவாரஸ்யம் இல்லை.

இப்படி கோல் அடிப்பதற்குப் பதிலாக மத்திய திடல் வழியாகக் கடந்துசென்று தந்திரமாக விளையாடி கோல் அடிக்க வேண்டும் என்று ஆட்டத்தை சுவாரஸ்யமாக்க இந்த விதி கொண்டுவரப்பட்டது.

உலகக் கிண்ண வரலாற்றில் சர்ச்சையைக் கிளப்பிய 'Offside' கோல்களில் ஒன்று:

⚽ 2010இல் அர்ஜென்ட்டினாவும் (Argentina) மெக்சிகோவும் (Mexico) மோதிய ஆட்டம்

⚽ அர்ஜென்ட்டினாவின் நட்சத்திர வீரர் கார்லோஸ் தெவேஸ் (Carlos Tevez) கோலடித்தார்.

⚽ பந்து அடிக்கப்பட்டபோது அவர் 'Offside'இல் நின்றுகொண்டிருந்தார்; அது தெளிவாகத் தெரிந்தது.

⚽ மெக்சிகோ வீரர்கள் நடுவரிடம் வாதாடினர்.

⚽ பெரும் குழப்பம் ஏற்பட்டது.

⚽ ஆனால் அப்போது VAR தொழில்நுட்பம் இல்லாததால் கோல் அங்கீகரிக்கப்பட்டது.

⚽ அர்ஜென்ட்டினா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

⚽ இந்த 'Offside' கோல் உலகக் கிண்ண வரலாற்றின் கரும்புள்ளியாக மாறியது.

⚽ VAR தொழில்நுட்பத்தைக் கொண்டுவர ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்