"நான் திரும்பி வந்துவிட்டேன்" - ரொனால்டோ பதிலடி
வாசிப்புநேரம் -
(படம்: IMAGN IMAGES via Reuters/Maria Lysaker)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் 5-0 எனும் கோல் கணக்கில்
உஸ்பெக்கிஸ்தானை வென்றுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஆட்டத்தில் இரு கோல்களைப் போட்டார்.
6 வெவ்வேறு உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் போட்ட முதல் விளையாட்டாளர் அவர்.
ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் அவர் முதல் கோலைப் புகுத்தினார்.
"நான் திரும்பி வந்துவிட்டேன்" என்று சொல்லி அவர் கோலைக் கொண்டாடினார்.
அவர் பெரிய போட்டிகளில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் கோல் போடவில்லை.
41 வயதாகும் ரொனால்டோ உலகக் கிண்ணத்தில் போர்ச்சுகலின் தொடக்க ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை என்று குறைகூறல்களுக்கு ஆளானார்.
காங்கோ குடியரசுடன் பொருதிய அந்த ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது.
இது மிகவும் கடினமான வாரமாக இருந்தது என்று ஆட்டத்திற்குப் பின் ரொனால்டோ கூறினார்.
மக்களின் கருத்துகள் கடுமையாக இருந்ததாய் அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AFP