"தோற்றாலும் வீரர்களே!" - காபோ வெர்ட் அணியைப் புகழ்ந்த பயிற்றுவிப்பாளர்
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Nathan Ray Seebeck
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காபோ வெர்ட்...
FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற 3ஆவது சிறிய நாடு.
போட்டியின் Knockout சுற்றுகளில் களமிறங்கிய ஆகச்சிறிய நாடு.
குழுச்சுற்றில் ஸ்பெயின், உருகுவே, சவுதி அரேபியா அணிகளைத் திக்குமுக்காடச் செய்து ஆட்டங்கள் சமநிலையில் முடியக் காரணமாக இருந்து ரசிகர்களை மிரள வைத்தது.
இன்றைய ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர்களான அர்ஜென்ட்டினாவுக்கும் கடுமையான சவால் தந்து துடிப்புடன் போட்டியிட்டது.
கூடுதல் நேரம் வரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில் இரு முறை ஆட்டத்தைச் சமநிலைபடுத்தி அரங்கத்தை அதிர வைத்தது.
இருப்பினும் 3 - 2 எனும் கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது.
"ஆட்டத்தின் முடிவில் கண்ணீரும் சோகமும் ஆட்கொண்டது. தோற்றாலும் எனது ஆட்டக்காரர்கள் வீரர்களே," என்று புகழ்ந்தார் பயிற்றுவிப்பாளர் பபிஸ்தா (Bubista).
"அர்ஜென்ட்டினா போன்ற சிறந்த அணிக்கு எதிராக 120 நிமிடங்கள் தைரியமாக மனம் தளராமல் ஆடியது பெருமையாக உள்ளது. வேறெந்த அணியும் 2 கோல்கள் போட்டு அர்ஜென்ட்டினாவை இறுதி நிமிடம் வரை திக்குமுக்காட வைத்திருக்குமா என்பது சந்தகமே," என்றார்.

ஆதாரம் : Others/BBC