Skip to main content
உலகக் கிண்ண அரங்கங்களில் தண்ணீர்ப் போத்தல்களுக்குத் தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ண அரங்கங்களில் தண்ணீர்ப் போத்தல்களுக்குத் தடை

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண அரங்கங்களில் தண்ணீர்ப் போத்தல்களுக்குத் தடை

(படம்: REUTERS/Brian Snyder)

உலகக் கிண்ண ஆட்டங்களின்போது ரசிகர்கள் விளையாட்டு அரங்கத்துக்குள் தண்ணீர்ப் போத்தல்களைக் கொண்டு செல்ல அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது.

ஆரம்பத்தில் ஒரு லிட்டர் வரையிலான அளவு கொண்ட போத்தல்களை அரங்கத்திற்குள் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது விதிமுறைகள் திருத்தப்பட்டு, தண்ணீர்ப் போத்தல்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை என்று The Athletic ஊடகம் சொன்னது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக விதிமுறை மாற்றப்பட்டதாக FIFA பேச்சாளர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

தண்ணீர்ப் போத்தல்களைக் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என்றாலும், அரங்கத்தில் அவை கட்டுபடியான விலைக்கு விற்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் நீர் தெளிக்கும் நிலையங்கள், மின்விசிறிகள், தண்ணீர் வழங்கும் நிலையங்கள், குளிரூட்டும் கூடாரங்கள் ஆகியவையும் அரங்கத்தில் அமைக்கப்படும்.

திறந்தவெளி அரங்கத்தில் ஆட்டங்கள் நடைபெறுவதால் கடும் வெப்பம் இருக்க வாய்ப்புண்டு.

அதனால் ரசிகர்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்