Skip to main content
செனகல் காற்பந்து அணியின் மருத்துவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

செனகல் காற்பந்து அணியின் மருத்துவர் - மாதர்நல மருத்துவரா?

வாசிப்புநேரம் -
செனகல் காற்பந்து அணியின் மருத்துவர் - மாதர்நல மருத்துவரா?

படம்: REUTERS/Lee Smith

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செனகல் காற்பந்து அணியின் மருத்துவர் மாதர்நல மருத்துவர் என்று அந்நாட்டின் காற்பந்துச் சம்மேளனத் தலைவர் அறிவித்திருக்கிறார்.

அந்தத் தகவலைச் சம்மேளனம் தாமதமாக அறிந்ததாக அவர் சொன்னார்.

தகவல் வெளிச்சத்துக்கு வந்த பிறகு தேவைப்படும் மருத்துவ உதவி கிடைக்குமா என்று செனகல் அணி வீரர்கள் கவலைப்படத் தொடங்கியதாகவும் சம்மேளனத் தலைவர் குறிப்பிட்டார்.

வீரர்களைச் சமாதானப்படுத்த கடைசி நிமிடத்தில் வேறு சில மருத்துவ நிபுணர்களைத் தேட வேண்டியிருந்ததாக அவர் பகிர்ந்தார்.

ஆனால் செனகலின் விளையாட்டு மருத்துவச் சங்கம் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தது.

செனகல் அணியின் மருத்துவர் விளையாட்டு மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் என்று சங்கம் தெளிவுபடுத்தியது.

செனகல் அணியில் சேர்வதற்கு முன்னர் அவர் மருத்துவமனையில் உடல் இயக்கச் சிகிச்சைப் பிரிவை வழிநடத்தியதாகவும் 2017ஆம் ஆண்டிலிருந்து செனகல் அணிக்குச் சேவையாற்றியதாகவும் சங்கம் குறிப்பிட்டது.

செனகல் அணி உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அந்நாட்டின் காற்பந்துச் சம்மேளனம் அணியின் தோல்விக்கான காரணத்தை விசாரிக்கிறது.

அணியின் பயிற்றுவிப்பாளரைச் சம்மேளனம் பணியிலிருந்து நீக்கியது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்