Skip to main content
சவுதி அரேபியாவை வெளுத்து வாங்கிய ஸ்பெயின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

சவுதி அரேபியாவை வெளுத்து வாங்கிய ஸ்பெயின்

வாசிப்புநேரம் -
சவுதி அரேபியாவை வெளுத்து வாங்கிய ஸ்பெயின்

படம்: Reuters/Claudia Greco

வெளியீடு : 22 Jun 2026 09:24AM புதுப்பிப்பு : 22 Jun 2026 11:37AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஸ்பெயின் - சவுதி அரேபியா ஆட்டத்தில் 4 - 0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது.

முதல் ஆட்டத்தில் அதிகம் கேள்விப்படாத காபோ வெர்ட் (Cabo Verde) அணியோடு ஸ்பெயின் கோல் ஏதுமின்றிச் சமநிலை கண்டதால், திறமை உண்டு பயன் இல்லை என்று குறைகூறப்பட்டது.

அந்த நிலைமை இன்று மாறியது.

ஸ்பெயினின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்திலேயே கோலைப் போட்டார்

மிக்கெல் ஒயார்ஸபால் (Mikel Oyarzabal) அடுத்தடுத்து 21ஆவது நிமிடத்திலும் 24ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்களை அடித்தார்.

பிற்பாதியில் சவுதி அரேபிய ஆட்டக்காரர் தவறுதலாகச் சொந்த கோலை அடித்து ஸ்பெயினுக்கு 4ஆவது கோலைக் கொடுத்தார்.

இன்றைய வெற்றியோடு ஸ்பெயின் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து அது உருகுவே (Uruguay) அணியைச் சந்திக்கும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்