கடைசி நிமிடத்தில் ஸ்பெயினுக்கு வெற்றி - சாதனை நாயகர் மிக்கெல் மெரினோ
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Jessie Alcheh
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இன்று அதிகாலை நடந்த இரண்டாம் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் பெல்ஜியம் அணிகள் சந்தித்தன.
இரண்டுக்கு ஒன்று என்று ஸ்பெயின் வெற்றிபெற்றது.
முதல்பாதி ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் முடிந்தது.
உலகின் தலைசிறந்த கோல் காவலர்களில் ஒருவரான பெல்ஜியத்தின் 33 வயது திபோ கோர்ட்டுவா (Thibaut Courtois) 71ஆவது நிமிடத்தில் காயமுற்றார்.
கண் கலங்கியவாறு அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.
மாற்று கோல் காவலர் சென்ன லாமென்ஸ் (Senne Lammens) களத்தில் இறங்கினார்.
ஸ்பெயின் அணி 86ஆவது நிமிடத்தில் மிக்கெல் மெரினோவைக் களத்தில் இறக்கியது.
2 நிமிடங்களிலேயே அவர் கோல் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
ஏற்கனவே போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் 91ஆவது நிமிடத்தில் கோல் போட்ட மெரினோ, இம்முறையும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில்தான் உள்ளே வந்தார்.
வரும் 15ஆம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்-பிரான்ஸ் அணிகள் சந்திக்கும்.

ஆதாரம் : Others