Skip to main content
ரொனால்டோவின் உலகக் கிண்ணக் கனவைக் கலைத்த ஸ்பெயின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

ரொனால்டோவின் உலகக் கிண்ணக் கனவைக் கலைத்த ஸ்பெயின்

வாசிப்புநேரம் -
ரொனால்டோவின் உலகக் கிண்ணக் கனவைக் கலைத்த ஸ்பெயின்

படம்: Reuters/Kai Pfaffenbach

வெளியீடு : 07 Jul 2026 09:33AM புதுப்பிப்பு : 07 Jul 2026 11:44AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஸ்பெயினும் போர்ச்சுகலும் இன்று அதிகாலை பொருதிய ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது.

கடைசி நிமிடத்தில் மாற்று விளையாட்டாளர் மிக்கெல் மெரினோ (Mikel Merino) போட்ட கோல் ஸ்பெயினுக்கு வெற்றியைப் பெற்று தந்தது.

போர்ச்சுகலின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கிண்ணக் கனவு கலைந்துவிட்டது.

இதுவே அவருடைய கடைசி உலகக் கிண்ணப் போட்டி.

ஆட்டத்துக்கு முன்பு அவர் அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வெடுக்கப்போவதை உறுதிப்படுத்தினார்.

ஸ்பெயின், போர்ச்சுகல் இரண்டுமே காற்பந்தில் பலம் பொருந்திய நாடுகள்.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்த அணிகள் ஒரு கோல் கூட போடவில்லை.

ஸ்பெயின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. அடுத்து அது பெல்ஜியத்தைச் சந்திக்கும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்