Skip to main content
மன்சாம்பி இரட்டைக் கோல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

மன்சாம்பி இரட்டைக் கோல் - சுவிட்சர்லந்து வெற்றி

வாசிப்புநேரம் -
மன்சாம்பி இரட்டைக் கோல் - சுவிட்சர்லந்து வெற்றி

படம்: Reuters

வெளியீடு : 19 Jun 2026 10:41AM புதுப்பிப்பு : 19 Jun 2026 11:13AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சுவிட்சர்லந்தும் போஸ்னியா-ஹெர்சகோவினாவும் (Bosnia-Herzegovina) களமிறங்கிய ஆட்டத்தில் சுவிட்சர்லந்து வென்றது.

4 -1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் நிறைவு பெற்றது.

லாஸ் ஏஞ்சலிஸ் சோஃபை (SoFi) விளையாட்டரங்கில் போட்டி நடந்தது.

ஆட்டத்தின் முதல் பாதி 0 - 0 என்று சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் சுவிட்சர்லந்தின் மாற்று ஆட்டக்காரர் யோஹான் மன்சாம்பி (Johan Manzambi) முதல் கோலைப் புகுத்தினார்.

அது ஆட்டத்தின் முதல் கோல் மட்டுமல்ல.

உலகக் கிண்ணப் போட்டியில் மன்சாம்பியின் முதல் கோலும் அதுவே.

80ஆம் நிமிடத்தில் போஸ்னியா அணியின் ஆட்டக்காரர் தாரிக் முஹரெமோவிச்சுக்குச் (Tarik Muharemovic) சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

சில நிமிடங்களில் சுவிட்சர்லந்தின் ரூபென் வர்காஸ் (Rubén Vargas) அணியின் இரண்டாம் கோலைப் புகுத்தினார்.

இறுதி நிமிடத்தில் சுவிட்சர்லந்தின் மன்சாம்பி மீண்டும் ஒரு கோல் போட்டார்.

இரண்டாம் பாதியின் முடிவில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அப்போது போஸ்னியா ஒரு கோல் புகுத்தி தானும் ஆட்டத்தில் இருப்பதைக் காட்டிக் கொண்டது.

சுவிட்சர்லந்து அணித் தலைவர் கிரானிட் ஸாக்காவின் (Granit Xhaka) பெனால்ட்டி (penalty) கோலுடன் ஆட்டம் முடிந்தது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்