Skip to main content
⚽ 39 நாள்கள்...104 போட்டிகள்... அனைத்தையும் பார்த்தால் US$50,000 சம்பளம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

⚽ 39 நாள்கள்...104 போட்டிகள்... அனைத்தையும் பார்த்தால் US$50,000 சம்பளம்!

வாசிப்புநேரம் -
⚽ 39 நாள்கள்...104 போட்டிகள்... அனைத்தையும் பார்த்தால் US$50,000 சம்பளம்!

(படம்: TIMOTHY A. CLARY / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகின் ஆகச்சிறந்த வேலையாக இருக்குமோ?

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் காணவேண்டும்...

85 அங்குலத் தொலைக்காட்சி... சொகுசு இருக்கை... கண்ணாடி அறை... அதுவும் நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கம் (Times Square) நடுவில்.

கூடவே 50,000 டாலர் சம்பளம்!

காற்பந்து ரசிகர்களின் கனவு... நனவானது இரு அமெரிக்கர்களுக்கு.

தலைமை உலகக் கிண்ணப் பார்வையாளர் எனும் அந்த வேலையில் சேர்வதற்காகத் தாம் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வேலையைவிட்டார் 26 வயது கெவின் அகோடோ (Kevin Akoto).

தமது துணையைவிட்டும் பிரிந்தார்.

அவருக்கும் 29 வயது ஆஸ்டின் ஃபிராங்க்லினுக்கும் (Austin Franklin) அந்த வேலையை Fox நிறுவனம் வழங்கியது.

காணொளி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஆயிரக்கணக்கான ரசிகர்களிலிருந்து அந்த இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ சேர்ந்து நடத்தும் உலகக் கிண்ணக் போட்டிக்கு உற்சாகம் சேர்க்க இந்த ஏற்பாடு.

கண்ணாடி அறைக்கு வெளியே அவர்களுடன் சேர்ந்து ரசிகர்கள் பலரும் ஆட்டங்களைக் காண்பது உண்டு.

அடுக்கடுக்காய் ஆட்டங்கள் நடைபெற்றாலும் சற்றும் சலிப்புத் தட்டவில்லை என்கின்றனர் இருவரும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்