Skip to main content
அர்ஜென்ட்டினா காற்பந்து அணிக்கு எதிராக இணைய சர்ச்சை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

அர்ஜென்ட்டினா காற்பந்து அணிக்கு எதிராக இணைய சர்ச்சை

வாசிப்புநேரம் -
அர்ஜென்ட்டினா காற்பந்து அணிக்கு எதிராக இணைய சர்ச்சை

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் நாளை மறுநாள் இங்கிலாந்தை எதிர்கொள்ளத் தயாராகிறது அர்ஜென்ட்டினா.

இப்போட்டித் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது அர்ஜென்ட்டினா.

ஆனால், அந்த அணியைச் சுற்றி பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

போட்டியில் அர்ஜென்ட்டினாவுக்குச் சாதகமாக நடுவர்கள் செயல்படுகின்றனர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

லயனல் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காட்டப்படாதது, எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் VAR மூலம் கோல் ரத்து செய்யப்பட்டது, சுவிட்சர்லந்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய VAR தீர்ப்பு ஆகியவை இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன.

மேலும், உலகத் தரவரிசையில் பலவீனமான அணிகளையே அர்ஜென்ட்டினா இதுவரை எதிர்கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஃபிஃபா (FIFA) மறுக்கிறது.

பல காற்பந்து விமர்சகர்கள் நடுவர்களின் முடிவுகள் விதிகளுக்கு உட்பட்டவையே என்றும் அர்ஜென்ட்டினாவுக்குச் சாதகமாகப் போட்டிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்