Skip to main content
மெஸ்ஸியின் கோல் வேட்டை தொடருமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

மெஸ்ஸியின் கோல் வேட்டை தொடருமா?

வாசிப்புநேரம் -
மெஸ்ஸியின் கோல் வேட்டை தொடருமா?

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அர்ஜென்ட்டினாவின் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) 2026 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் கோல் அடித்துள்ளார்.

அவருக்கு வயது 39.

அடுத்துக் காலிறுதிச் சுற்று.

அதில் அர்ஜென்ட்டினாவும் சுவிட்சர்லந்தும் மோதவிருக்கின்றன.

மெஸ்ஸி தன்னுடைய கோல் வேட்டையைத் தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த முறை உலகக்கிண்ணத்தை வென்ற அர்ஜென்ட்டினா குழுச் சுற்றை எளிதாகக் கடந்தது.

ஆனால் அடுத்த இரண்டு நாக்-அவுட் (Knock Out) ஆட்டங்களில் கடும் சவாலை எதிர்கொண்டது.

காபோ வெர்டை (Cape Verde) கூடுதல் நேரத்தில் வீழ்த்திய அர்ஜென்ட்டினா, எகிப்துக்கு எதிராக இரண்டு கோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டுவந்து 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்த ஆட்டத்தில் மெஸ்ஸி ஒரு பெனால்ட்டியைத் தவறவிட்டாலும் முக்கியமான கோலை அடித்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்.

போட்டியில் இதுவரை 8 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேயுடன் (Kylian Mbappe) சமநிலையில் உள்ளார்.

உலகக் கிண்ண வரலாற்றில் 21 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அர்ஜென்ட்டினாவின் பலம் மெஸ்ஸி மட்டுமல்ல...

அணியின் ஒற்றுமையும் தன்னம்பிக்கையும்தான் என்று பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni) கூறினார்.

மறுபுறம் சுவிட்சர்லந்து, அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், கொலம்பியாவை பெனால்ட்டியில் தோற்கடித்துக் காலிறுதிக்கு முன்னேறியது.

இரு அணிகளும் மோதும் காலிறுதி ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி அரையிறுதியில் நார்வே அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்