Skip to main content
உலகக் கிண்ணத்தில் 64 அணிகளா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணத்தில் 64 அணிகளா?

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத்தில் 64 அணிகளா?

(படம்: ALEX WONG / GETTY IMAGES NORTH AMERICA / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அணிகளின் எண்ணிக்கை 64ஆக உயர்த்துவது குறித்து ஆராயப்படுகிறது.

தற்போது நடைபெறும் போட்டியில் முதல்முறையாக 48 அணிகள் களமிறங்கின.

போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதால் அணிகளின் எண்ணிக்கையை 64க்கு உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) தெரிவித்தார்.

போட்டி உலகம் முழுவதுக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்; ஐரோப்பாவுக்கும் தென்னமெரிக்காவுக்கும் மட்டுமல்ல என்று அவர் சொன்னார்.

2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் 64 அணிகள் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஸ்பெயின், போர்ச்சுகல், மொரொக்கோ ஆகிய 3 நாடுகளில் போட்டி நடைபெறும்.

ஆனால் அணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் அது போட்டியைச் சீர்குலைத்துவிடும் என்று சிலர் கூறினர்.

நாடுகள் அதை ஏற்று நடத்துவதும் சிரமமாகிவிடும் என்று BBC சொன்னது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்