Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றத் துடிப்புடன் களமிறங்கும் அர்ஜென்ட்டினா, ஸ்பெயின்

வாசிப்புநேரம் -
வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றத் துடிப்புடன் களமிறங்கும் அர்ஜென்ட்டினா, ஸ்பெயின்

படம்: Reuters/Lee Smith

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 20 Jul 2026 02:56AM புதுப்பிப்பு : 20 Jul 2026 06:17AM
உலகக்கிண்ணக் காற்பந்து போட்டியின் இறுதிச்சுற்று சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.

அர்ஜென்ட்டினாவும் ஸ்பெயினும் வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றத் துடிப்புடன் களமிறங்குகின்றன.

இதற்கு முன்பு இரண்டு அணிகளும் ஒரே ஒரு முறைதான் உலகக்கிண்ணப் போட்டியில் எதிர் எதிரே மோதிக்கொண்டன.

1966ஆம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்ட்டினா ஸ்பெயினை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள MetLife விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

அதைக் காண 80,000 ரசிகர்கள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை மூன்று மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

உலக ரசிகர்களின் கவனம் அர்ஜென்ட்டினாவின் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) மீதும் ஸ்பெயினின் லமீன் யமால் (Lamine Yamal) மீதும் திரும்புகிறது.

ஸ்பெயின் 2010ஆம் ஆண்டில் உலகக் கிண்ணப் போட்டியில் வென்றது.

1978, 1986, 2022 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்ட்டினா வாகை சூடியது.

ஸ்பெயின் இரண்டாம் முறையாக வெற்றிக்கனியைச் சுவைக்குமா?

அல்லது, தொடர்ந்து இரண்டு முறை உலகக்கிண்ணத்தை வென்ற பெருமை அர்ஜென்ட்டினாவைச் சேருமா?

இன்னும் சில மணிநேரத்தில் விடை!
ஆதாரம் : AFP/FIFA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்