Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து 2022 - தென் கொரியா முன்னேறியது...ஆனால் வெற்றி பெற்றும் கெமரூன் முன்னேறவில்லை

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து 2022 - தென் கொரியா முன்னேறியது...ஆனால் வெற்றி பெற்றும் கெமரூன் முன்னேறவில்லை

Jewel SAMAD / AFP

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

  • சுவிட்ஸர்லந்து - செர்பியா ஆட்டத்தில் 3-2 என்ற கோல்கணக்கில் சுவிட்ஸர்லந்து வெற்றி பெற்றது. அந்த வெற்றியால் G பிரிவில் அது அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

 

  • கெமரூனுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் கெமரூன் வென்றது. உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரேசிலுக்கு எதிராக ஆப்பிரிக்க அணி ஒன்று வெற்றிபெறுவது இதுவே முதல் முறை.இருப்பினும் அது அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

 

  • கானா- உருகுவே ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கணக்கில் உருகுவே வென்றது.

 

  • போர்ச்சுகல் தென் கொரியா ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் தென் கொரியா வெற்றிபெற்றது. அந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் தென் கொரியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது.


தேர்ந்தெடுக்கப்பட்ட 16 நாடுகளுக்கு இடையிலான ஆட்டங்கள் இன்று முதல் நடைபெறும்.


 

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்