Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றிலேயே போட்டிகளை ஏற்று நடத்தும் நாடு அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றிலேயே போட்டிகளை ஏற்று நடத்தும் நாடு அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி

(படம்: Kirill KUDRYAVTSEV / AFP)

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடங்கி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், குழுச் சுற்று ஆட்டங்கள் முடிவுறத் தொடங்கிவிட்டன.

செனகலுக்கும் (Senegal) எக்குவடோருக்கும் (Ecuador) இடையிலான ஆட்டத்தில் செனகல் இரண்டுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதன் குழுவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

(படம்: JUNG Yeon-je / AFP)

நெதர்லந்தும் கத்தாரும் சந்தித்த ஆட்டத்தில் இரண்டுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் நெதர்லந்து வெற்றி பெற்று குழு Aஇல் முதலிடத்தில் உள்ளது.

(படம்: Anne-Christine POUJOULAT / AFP)

உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றிலேயே போட்டிகளை ஏற்று நடத்தும் நாடு அதற்குள் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது இதுவே முதன்முறை.

குழு B ஆட்டங்களில் மூன்றுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வேல்ஸைத் தோற்கடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து குழுவின் முதலிடத்தில் உள்ளது.

(படம்: Ina Fassbender / AFP)

அடுத்து அது செனகலைச் சந்திக்கும்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வென்ற அமெரிக்கா 2ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

அடுத்து அது நெதர்லந்தைச் சந்திக்கவிருக்கிறது.

(படம்: Fabrice COFFRINI / AFP)

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்