உலகின் ஆக மதிப்புமிக்க விளையாட்டாளர் யார் தெரியுமா?

(Photo by FRANCK FIFE / AFP)
உலகின் ஆக மதிப்புமிக்க விளையாட்டாளர் யார் என்பதை ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டுள்ளது, சுவிட்ஸர்லந்து ஆய்வுக் குழுவான CIES Football Observatory.
அதன்படி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (Paris St Germain) குழுவைச் சேர்ந்த கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) உலகின் ஆக மதிப்புமிக்க விளையாட்டாளராகியிருக்கிறார்.
அவர் அண்மையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் குழுவுடன் மூவாண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
'மதிப்புமிக்க' என்றால்?
ஒரு விளையாட்டாளரை மற்றொரு குழுவுக்கு மாற்றக் கொடுக்கவேண்டிய தொகை அவரது மதிப்பை நிர்ணயிக்கிறது.
எம்பாப்பேயின் மதிப்பு - 205.6 மில்லியன் யூரோ (302.6 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி)
அவருக்கு அடுத்த இரண்டு நிலைகளில் ரியால் மாட்ரிட் (Real Madrid) குழுவின் வினிசியஸ் ஜூனியர் (Vinicius Jr) மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) குழுவில் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) இருவரும் உள்ளனர்.
உலகின் ஆக மதிப்புமிக்க விளையாட்டாளர் என்ற சாதனையைத் தற்போது வைத்திருப்பவர் நெய்மார்.
2017ஆம் ஆண்டு, பார்சலோனாவிடமிருந்து அவரை 222 மில்லியன் யூரோவுக்கு (326.74 சிங்கப்பூர் வெள்ளி) வாங்கியது PSG.
-Reuters