Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் களமிறங்கும் 13 வயது இளையர்

வாசிப்புநேரம் -
இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் களமிறங்கும் 13 வயது இளையர்

(படம்: X)

2025 இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் (IPL) விளையாடவிருப்போருக்கான ஏலத்தில் 13 வயது இளையர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Suryavanshi) ஏலத்தில் இதுவரை பங்கேற்ற ஆக இளையவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணி அவரை 1.10 கோடி ரூபாய் (176,079 சிங்கப்பூர் வெள்ளி) செலவில் கைப்பற்றியது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாகத் தோன்றிய சூரியவன்ஷி அண்மையில் 19 வயதுக்கு உட்பட்ட தேசிய விளையட்டாளர் குழுவில் சேர்க்கப்பட்டார்.

2025 இந்தியப் பிரிமியர் லீக் விளையாட்டாளர்களுக்காக இரண்டு நாள் ஏலம் நடத்தப்பட்டது.

முதல் நாளில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணி ஆக அதிகமான செலவில் விளையாட்டாளரைக் கைப்பற்றியது.

அது ரிஷப் பன்ட்டுக்காக (Rishabh Pant) 27 கோடி ரூபாய் செலவுசெய்தது.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்