Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

பரபரப்பாகப் பேசப்படும் ChatGPT - அப்படி என்றால்?

வாசிப்புநேரம் -
ChatGPT....அண்மைக் காலமாக இணையவாசிகளின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் புதிய தொழில்நுட்பம்.

இளையவர் முதல் பெரியவர் வரை ChatGPTயைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ChatGPT - இதன் அர்த்தம்?

Chat என்றால் உரையாடல்.
GPT (Generative Pre-trained Transformer) என்றால் முன் கூட்டியே பயிற்றுவிக்கப்பட்டதை உருவாக்கும் திறன்கொண்ட தொழில்நுட்பம்.

முன்கூட்டியே பயிற்றுவிக்கப்பட்ட உரையாடல்களை செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பம் வாயிலாக செயல்படுத்தும் முறை ChatGPT.

ChatGPT என்றால்?
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் மொழிக் கருவி
  • மனிதனைப் போன்று உரையாடும்
  • கேள்விகளுக்குப் பதில் கூறுவது, மின்னஞ்சல், கடிதம், கட்டுரை எழுதுவது ஆகியவற்றைச் செய்யும்
ChatGPTயை தயாரித்திருப்பது?
  • OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு, ஆய்வு நிறுவனம்
  • நிறுவனம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் (San Francisco) தளமாகக் கொண்டது.
  • 2022ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அறிமுகமானது.
  • நிறுவனம் ஏற்கெனவே DALLE•2, Whisper ஆகிய இணையக் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளது.

ChatGPT ஏன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது?
  • மிக விரிவான பதில்களை வழங்கக்கூடியது
  • அறிமுகம் கண்ட முதல் 5 நாள்களிலேயே ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்
  • கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே அது பதில்களை அளிக்கும்
  • நாம் சிந்தனைத் திறனை இழக்கும் அளவுக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம்
ChatGPT - என்னவெல்லாம் செய்யலாம்?
  • கேள்விகளுக்குப் பதிலளிப்பது
  • கட்டுரை எழுதுவது
  • ஒரு கலையைப் பற்றி நுணுக்கமாக விளக்குவது
  • செயற்கை நுண்ணறிவுக் கலையை உருவாக்குவது
  • தத்துவ ரீதியில் உரையாடுவது
  • 'coding' எனப்படும் கணினி நிரலாக்கம் செய்வது
  • குறிப்பிட்ட ஒருவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்பதைக் கூட நீங்கள்
ChatGPTஇடம் கேட்கலாம்.

ChatGPTக்கு வரம்புகள் உண்டா?
  • மிகவும் துல்லியமான கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாது. கேள்வியை அது விளங்கிக்கொள்ள மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
  • சில நேரங்களில் பதில்களின் தரம் குறைவாக இருக்கலாம்
  • சில சமயங்களில் அர்த்தமற்றதாகவும் இருக்கலாம்
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்