Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

ChatGPT - Google...என்ன வித்தியாசம்?

வாசிப்புநேரம் -
மனிதனையும் தொழில்நுட்பத்தையும் பிரிக்க முடியாது.

காலை முதல் இரவு வரை மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் ஏதோ ஒருவகையில் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே அமைகின்றன.

அந்த வரிசையில் செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி மனிதர்களுடன் உரையாடக்கூடிய புதிய தொழில்நுட்பம் ஒன்று இணையவாசிகளிடையே பிரபலமாகி வருகிறது.

அது ChatGPT. மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரையாடல் வாயிலாக பதில் கூறும்.

ஏற்கனவே Google இருக்கிறதே....அதிலும் தான் கேள்வி கேட்டால் விடை கிடைக்கும் என்று நினைக்கலாம்.

ஆனால் ChatGPTஇல் வித்தியாசம் உண்டு

ChatGPT
1. எந்தக் கேள்வியானாலும் மிக நேர்த்தியான பதிலைத் தரும்.

உதாரணத்திற்கு:
2. எதையும் ஒருவரது வயதுக்கு ஏற்ப எழுதிக் கொடுக்கும்.

Google
Googleஇன் பதில்கள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருக்கும். நிறைய தெரிவுகள் இருப்பதால் துல்லியமானதைத் தேட நேரம் பிடிக்கும். 

ChatGTP
இணையத்தில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் அதனால் திரட்ட முடியாது.

Google
ஏற்கெனவே தேடப்பட்ட இடங்கள், பொருள்கள், அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகள் வழங்கும்.

ChatGTP
ஒப்பந்தம் எழுது, கவிதை எழுது, பயணத்தைத் திட்டமிடு, பரிசுக்கு யோசனை சொல் - இப்படி எதையும் கேட்கலாம்.

Google
கதையோ கவிதையோ - தொடக்கம் முதல் உருவாக்கச் சொல்ல முடியாது. நல்ல கதை/கவிதை எழுதுவதற்கான வழிகளை மட்டுமே சொல்லமுடியும்.

ChatGTP
குறிப்பிட்ட தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விடையளிக்கும்.

Google
அண்மை நிலவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு ரயில், விமானப் பயண அட்டவணைகள், போக்குவரத்து நிலவரம் ஆகியவை. 

ChatGTP
குறிப்பிட்ட தரவுகள் மட்டுமே இருப்பதால் அது கொடுக்கும் சில பதில்கள் பொருத்தமாக இல்லாமல் போகலாம்.

Google
பொருத்தமான பதிலைக் கண்டுபிடிக்கப் பல தளங்களைப் பரிந்துரைக்கும். அவற்றை ஒப்பிட்டுப் பார்த்துத் பதிலைத் தேர்ந்தெடுக்கலாம்.

ChatGTP
ஆராய்ச்சிக் கட்டத்தில் இருப்பதால் இப்போதைக்கு இலவசம். ஆனால் விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம்.

Google
இலவசமாகப் பயன்படுத்தலாம்.

ChatGPT
மொழியை ஆராயும் திறன் உண்டு.

Google
தேடல் தளம் மட்டுமே.

ChatGTP
இதன் தனித்துவம் செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி மனிதர்களைப் போலவே இது நிகழ்த்தும் உரையாடல்.

Google
உரையாடல் நடைமுறை இல்லை. தேடிப் பார்த்து விடை கண்டுபிடிக்கும் அம்சம் மட்டுமே.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்