Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'உயர்தர முகக்கவசங்களை அணியுங்கள்': அமெரிக்கா

வாசிப்புநேரம் -

அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையங்கள் முகக்கவசம் அணியும் வழிகாட்டி முறைகளில் திருத்தங்கள் செய்துள்ளன. 

அமெரிக்கர்கள் உயர்தர முகக்கவசங்களான N95,KN95யைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அவை கூறின.

ஆனால் நாடு முழுதும் அனைவரும் N95 முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொள்வதை அவை நிறுத்திக்கொண்டுள்ளன.  

அமெரிக்காவில் ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.  

கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பு  பெற்றோருக்குக் கவலையளிக்கிறது.

அவர்கள் பிள்ளைகளுக்குக் கிருமி தொற்றுவதைத் தவிர்க்கும் பொருட்டு அவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருக்கின்றனர். 

அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகள் மாநிலத்திற்கு மாநிலம், நகரத்திற்கு நகரம் வேறுபட்ட  விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. 

சில வட்டாரங்களில் முகக்கவசம் அணிவதும் வழக்கமான சோதனைகள் செய்வதும் கட்டாயமாக உள்ளது. அதனால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர். 

-Reuters/gs

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்