Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஓமக்ரான் ரகக் கிருமித்தொற்றால் வகுப்புகளிலிருந்து வெளியேறிய அமெரிக்க மாணவர்கள்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் Boston, Chicago நகரங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துள்ளனர். 

ஓமக்ரான் கிருமிப்பரவல் அதிகரிப்பதால், இணையம் வழியே வகுப்புகளைத் தொடரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

நேரடியாக வகுப்புகளைத் தொடர்வது பற்றி அறிவிக்கப்பட்ட இரண்டே  நாளில் Chicagoவில் மாணவர்கள் வகுப்புகளைவிட்டு வெளியேறினர். 

கூடுதல் சுகாதார நடைமுறைகள் திருப்தியளிக்கவில்லை என்று மாணவர்கள் கூறினர். 

பள்ளிகள், கிருமிப்பரவல் கூடங்களாக உள்ளன என்றும் அங்கு பாதுகாப்பு இல்லை என்றும் மாணவர்கள் கருதுகின்றனர்.  

Bostonஇல் உள்ள 11 பள்ளிகளின் சுமார் 600 மாணவர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

வகுப்புகள் இரண்டு வாரத்துக்கு இணையம்வழி நடத்தப்படவேண்டும் என்றும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேலும் கடுமையான பரிசோதனைகள் தேவை என்றும் Boston மாணவர் ஆலோசனை மன்றம் வலியுறுத்தியது. 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்