Skip to main content
உலகச் செவிப்புலன் தினம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உலகச் செவிப்புலன் தினம் - 2.5 பில்லியன் மக்களுக்குக் காது குறைபாடு?

வாசிப்புநேரம் -
செவிப்புலன் என்பது வெறும் ஒலிகளை மட்டும் கேட்கும் திறனைக் குறிப்பதல்ல.

மாறாக நமது உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அது உதவுகிறது.

ஒருவர் சமூகத்துடன் இணைந்து வாழவும் உடல் மன ரீதியாகப் பாதுகாப்பாக உணரவும் செவிப்புலன் அவசியமாகிறது.

மார்ச் 3 உலகச் செவிப்புலன் திறன் நாளையொட்டி, ஆசியப் பசிஃபிக் வட்டாரத்தில் செவிப்புலன் இழப்புப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை Cochlear நிறுவனம் வெளியிட்டது.
 

மேற்கு பசிஃபிக் வட்டாரம்

மேற்கு பசிஃபிக் வட்டாரம் என்பது 37 நாடுகள் மற்றும் பகுதிகளைக் குறிக்கிறது. ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, நியூசிலந்து உள்ளிட்ட நாடுகள் அதில் அடங்கும்.
சுருக்கமாகப் பார்க்க
5இல் 1

👂🏼உலகளவில் 5 பேரில் ஒருவர் செவிப்புலன் இழப்பை எதிர்நோக்குகின்றனர்.

👂🏼 இந்த எண்ணிக்கை 2050இல், 4 பேரில் ஒருவராக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

👂🏼 அதாவது 2.5 பில்லியன் மக்கள் செவிப்புலன் இழப்பை எதிர்நோக்கலாம்.


7%

👂🏼உலகிலேயே மேற்கு பசிஃபிக் வட்டாரத்தில்தான் ஆக அதிகமான செவிப்புலன் இழப்புப் பிரச்சனை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

👂🏼 சுமார் 7 விழுக்காட்டு மக்கள் செவிப்புலன் இழப்பை எதிர்நோக்குகின்றனர்.


546 மில்லியன்

👂🏼 மேற்கு பசிஃபிக் வட்டாரத்தில் மட்டும் 546 மில்லியன் மக்கள் செவிப்புலன் திறன் இன்றி வாழ்கின்றனர்.

👂🏼 அவர்களில் 38 மில்லியன் பேர் பிள்ளைகள்.


760 மில்லியன்

👂🏼2050ஆம் ஆண்டுக்குள் ஆக அதிகச் செவிப்புலன் இழப்பைக் கொண்ட வட்டாரமாக மேற்கு பசிஃபிக் மாறக்கூடும்.

👂🏼 அத்தகையோரின் எண்ணிக்கை சுமார் 760 மில்லியன் பேராக இருக்கலாம்.


$ 328 பில்லியன்

👂🏼 மேற்கு பசிஃபிக் வட்டாரத்தில் செவிப்புலன் இழப்பால் ஏற்படும் மொத்த செலவு $328 பில்லியன் (419 பில்லியன் வெள்ளி) என கணக்கிடப்பட்டுள்ளது.

20இல் 1

👂🏼 சராசரியாக 20 பெரியவர்களில் ஒருவர் 'cochlear implant' அறுவைச் சிகிச்சை மூலம் பலன் பெறக்கூடும்.


245 மில்லியன்

👂🏼 மேற்கு பசிஃபிக் வட்டாரத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட 245 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

👂🏼 இந்த எண்ணிக்கை 2050க்குள் இரட்டிப்பாகும்.

👂🏼 இதனால் பல நாடுகள் மூப்படைந்த சமூகமாக மாறும்.


3இல் 1

👂🏼 வயதாகும்போது செவிப்புலன் இழப்பு வழக்கமான பிரச்சினையாகிவிடுகிறது.

👂🏼 60 வயதுக்கு மேற்பட்ட மூவரில் ஒருவர் ஓரளவுக்குச் செவிப்புலன் இழப்பை அனுபவிக்கின்றனர்.

ஆரம்பச் சிகிச்சை

👂🏼 செவிப்புலன் குறைபாடு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும்.

👂🏼 மிதமான செவிப்புலன் இழப்புக்குச் செவிக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.

👂🏼கடுமையான அல்லது முழுச் செவிப்புலன் இழப்புக்கு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்