ஒரு நாளாவது சிறையில் கழிக்க வேண்டும் - 104 வயதுப் பெண்ணின் ஆசை
வாசிப்புநேரம் -

(படம்: Pixabay)
பிறந்தநாளில் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்கவோ...புதிய அனுபவம் பெறவோ பலர் விரும்புவர்.
நியூயார்க்கில் வாழும் 104 வயதுப் பெண்ணுக்கு ஒரு வித்தியாசமான ஆசை.
சிறையில் ஒரு நாளைக் கழிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம்...
அதை நிறைவேற்றியது காவல்துறை.
லோரெட்டா சேம்பர்லென் (Loretta Chamberlain) சிறையின் சீர்திருத்தக் கூடத்தைச் சுற்றிப் பார்ப்பதைச் சமூக ஊடகப் பதிவில் காணமுடிகிறது.
சிறைக் கைதிகள் எப்படிப் படமெடுக்கப்படுவார்களோஅதுபோலவே சேம்பர்லெனுக்கும் படமெடுக்கப்படுகிறது.
சிறிது நேரம் அவர் சிறையில் வைக்கப்படுகிறார்.
கைவிலங்குகள், K-9 மோப்ப நாய்கள் முதலியனவும் சேம்பர்லெனுக்குக் காட்டப்படுகின்றன.
காவல்துறையினர் சிலர் தாதிமை இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த சேம்பர்லென் தம் விருப்பத்தைச் சொன்னதாக The Washington Post ஊடகம் சொன்னது.
காவல்துறையினர் அதை நிறைவேற்ற முன்வந்தனர்.
சிறைச்சாலைக்குச் சென்றது சிறந்த பிறந்தநாளாக அமைந்ததாக அவர் சொன்னார்.

ஆதாரம் : Others