20 நாள்களுக்குக் கடலுக்கு அடியில் வாழ முடியுமா?
வாசிப்புநேரம் -

படம்: MARTIN BERNETTI / AFP
120 நாள்கள்.
நீருக்குக்கீழ் வாழ்ந்து Guinness உலகச் சாதனை படைத்திருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.
59 வயது ருடிகர் கொச் (Rudiger Koch) தம்முடைய 30 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட வீட்டைக் கடலுக்கு அடியில் அமைத்தார்.
"இந்த அனுபவம் சிறப்பாக அமைந்தது. இது முடிவுக்கு வந்தது வருத்தத்தை அளிக்கிறது." என்றார் திரு கொச்.
கடலில் 11 மீட்டர் ஆழத்தில் அவருடைய வீடு அமைந்திருந்தது.
படுக்கை, கழிவறை, தொலைக்காட்சி, கணினி, இணையம், உடற்பயிற்சி சைக்கிள்..
என நவீன வாழ்க்கை முறைக்குத் தேவைப்படும் வசதிகள் அனைத்தும் அவருடைய வீட்டில் இருந்தன.
கடலின் மேற்பரப்பில் இருந்த சூரியத் தகடுகள் மின்சாரத்தை வழங்கின.
இதற்கு முன் 100 நாள்களுக்குக் கடலுக்கு அடியில் வாழ்ந்து சாதனை படைத்த பெருமை அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசஃப் டிட்டுரியைச் (Joseph Dituri) சேரும்.

ஆதாரம் : Others/The Guardian