Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

அன்பளிப்புப் பணத்தை வைத்துக் கட்டுமான ஊழியர்களுக்குப் பானங்களை வாங்கிக்கொடுத்த சிறுவன்

வாசிப்புநேரம் -
கட்டுமான ஊழியர்களுக்குப் பானங்களை வாங்கிக்கொடுத்த
13 வயதுச் சிறுவனுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகின்றன.

கடும் வெயிலில் உழைக்கும் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே அந்தச் சிறுவன் பானங்களை வழங்கிய காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.

"உங்களுடைய உழைப்புக்கு நன்றி" என்று அந்தச் சிறுவன் காணொளியில் கூறுவது தெரிகிறது.

தமக்குக் கிடைத்த அன்பளிப்புப் பணத்தை வைத்துச் சிறுவன் பானங்களை வாங்கினான்.

சிறுவனின் உன்னத எண்ணத்தைப் பாராட்டி இணையவாசிகள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

பலருக்குச் சிறுவனின் செயல் முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்