Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

சீனாவில் பரதநாட்டிய அரங்கேற்றம் முடித்து வரலாறு படைத்த 13 வயதுச் சிறுமி

வாசிப்புநேரம் -
சீனாவில் பரதநாட்டிய அரங்கேற்றம் முடித்து வரலாறு படைத்த 13 வயதுச் சிறுமி

X/Manikandan

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவைச் சேர்ந்த லெய் முசி (Lei Muzi) சென்ற ஞாயிற்றுக்கிழமை (11 ஆகஸ்ட்) பரதநாட்டிய அரங்கேற்றம் முடித்து வரலாறு படைத்துள்ளார்.

இது சீனாவில் நடத்தப்பட்ட முதல் அரங்கேற்றம் என்று கூறப்படுகிறது.

அந்தத் தகவலை The Hindustan Times நாளேடு வெளியிட்டது.

13 வயது லெய் முசி பிரபல நடனமணி லீலா சாம்சன் (Leela Samson), இந்திய அரசதந்திரிகள், சீன ரசிகர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார்.

"சீனாவில் ஒரு சீன ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு அங்கு முதன்முதலாகச் செய்யப்பட்ட அரங்கேற்றம் இது. பரதநாட்டிய வரலாற்றில் இது ஒரு மைல்கல்," என்று லெய்யின் நாட்டிய ஆசிரியர் கூறினார்.

லெய் முசி இம்மாதப் பிற்பகுதியில் சென்னையில் நடனமாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக The Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.

"நான் பரதநாட்டியத்தைப் பெரிதும் விரும்புகிறேன். நான் தினமும் நாட்டியம் ஆடுகிறேன். இந்தியக் கலாசாரத்தின் மீது எனக்கு உண்மையிலேயே ஆர்வம் உண்டு," என்றார் லெய் முசி.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்