Skip to main content
விளையாட்டு அரங்கின் கூரையை உரசிய விமானம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

விளையாட்டு அரங்கின் கூரையை உரசிய விமானம்?

வாசிப்புநேரம் -
விளையாட்டு அரங்கின் கூரையை உரசிய விமானம்?

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் ரக்பி ஆட்டத்திற்கு முன்பு நடத்தப்பட்ட விமான சாகசம் பார்வையாளர்களைப் பதறவைத்துள்ளது.

இரண்டு விமானங்கள் மைதானத்தின் கூரைக்கு மிக அருகில் பறப்பதுபோல் காணொளிகளில் தெரிந்தன.

நேற்று தென்னாப்பிரிக்காவின் Springboks அணியும் நியூசிலந்தின் All Blacks அணியும் DHL மைதானத்தில் மோதின.

ஆட்டத்திற்கு முன்பு Airlink நிறுவனத்தின் இரண்டு Embraer E-Jet விமானங்கள் மைதானத்திற்கு மேலே மிகக் குறைந்த உயரத்தில் பறந்தன.

அப்போது வாணவேடிக்கையும் இடம்பெற்றது.

ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட காணொளியில் முதல் விமானம் மைதானத்தின் கூரையை நெருங்குவதுபோல் தெரிந்தது.

"அது பேராபத்தில் முடிந்திருக்கலாம்," என்று X தளப் பயனர் ஒருவர் பதிவிட்டார்.

ஆனால் வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட காணொளியில் விமானத்திற்கும் கூரைக்கும் இடையே அதிக இடைவெளி இருந்ததுபோல் தெரிகிறது.

Airlink விமானங்கள் மைதானத்தின் மீது மோதும் அபாயத்தில் இருந்ததாகக் கிடைக்கக்கூடிய விமானத் தகவல்கள் காட்டவில்லை என்று Cape Town Etc செய்தித்தளம் தெரிவித்தது.

தென்னாப்பிரிக்க விளையாட்டுப் போட்டிகளில் இத்தகைய விமானங்கள் செல்வது புதிதல்ல.

1995ஆம் ஆண்டு ரக்பி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்பும் Boeing 747 விமானம் ஜொஹான்னஸ்பர்க் (Johannesburg) நகரின் Ellis Park மைதானத்திற்கு மேலே பறந்தது.
ஆதாரம் : Others/New York Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்