Skip to main content
முழங்கைகளை இழந்தும் நம்பிக்கை இழக்காத பெண்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

முழங்கைகளை இழந்தும் நம்பிக்கை இழக்காத பெண்

வாசிப்புநேரம் -
முழங்கைகளை இழந்தும் நம்பிக்கை இழக்காத பெண்

yzwb.net

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

7 வயதில் தெரியாமல் உயர் மின்னழுத்த சாதனத்தைத் தொட்டார் சியு ஃபாங்யான் (Xu Fangyan)

அதனால் முழங்கைகளை இழந்தார்.

சீனாவின் சீசுவான் (Sichuan) பகுதியைச் சேர்ந்த அவருக்கு இப்போது 28 வயது.

அன்றாட நடவடிக்கைகளுக்கு அவரது சகோதரியை நம்பி இருக்க அவர் விரும்பியதே இல்லை.

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு ஏற்ப தன்னம்பிக்கையுடன் சுயமாகச் செயல்படக் கற்றுக்கொண்டார்.

யாருடைய உதவியுமின்றி அவர் எழுதுவார். சொந்தமாக ஒப்பனை அணிந்துகொள்வார்.

குதிரை ஓட்டவும் கற்றுக்கொண்டு போட்டிகளிலும் வென்றுள்ளார்.

சமூக ஊடகத்தில் அவரது அன்றாட வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளின் மூலம் பலருக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

பள்ளியில் கேலி செய்யப்பட்டாலும் பட்டம் பெற்ற பிறகு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டாலும் அவர் துவண்டுபோகவில்லை.

குடும்பத்தாரின் ஆதரவுடன் மனந்தளராமல் அவர் வாழ்வில் முன்னேறினார்.

கைகளை இழந்தவர்களுக்கு ஏற்ற வகையில் எளிதில் திறக்கும் மூடிகள்கொண்ட போத்தல்களைத் தயாரிப்பது பற்றி ஒப்பனைப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவரது விடாமுயற்சியையும் ஒப்பனை செய்யும் ஆற்றலையும் இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்