Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

துவண்டுபோகாமல் கனவை நிறைவேற்றிய புற்றுநோய் நோயாளி

வாசிப்புநேரம் -
வாழ்வதற்கு இன்னும் 3 மாதமே இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறினர்...

ஆனால் 31 வயது பாவ் ஜுன்யாங் (Bao Junyang) துவண்டுபோகவில்லை..

இருக்கும் நேரத்தில் கனவை நிறைவேற்றியுள்ளார் அவர்.

கலைஞரான ஜுன்யாங் தமது படைப்புகளைக் கொண்டு காட்சியகம் அமைத்துள்ளார்.

நேற்று முன்தினத்திலிருந்து (3 ஜனவரி) Suntec City கடைத்தொகுதியில் Canvas of Memories எனும் பெயரில் காட்சியகம் உள்ளது.

நீல, வெள்ளை நிறங்களில் சிங்கப்பூர்ச் சின்னங்களைச் சித்திரிக்கும் படைப்புகள்...படங்கள்... ஓவியங்கள் என 56 படைப்புகள் உள்ளன.

கடந்த இரண்டு நாளில் உற்றார் உறவினர், பொதுமக்கள், சுற்றுப்பயணிகள் ஆகியோர் காட்சியகத்தில் கூடினர்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களும் தம்முடைய படைப்பைக் கண்டு ரசித்தது சிறந்த அனுபவமாய் இருந்ததாக ஜுன்யாங் 8World சீன ஊடகத்திடம் சொன்னார்.

நோய்வாய்ப்பட்டோரின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும் Ambulance Wish Singapore அமைப்பு காட்சியகத்தை அமைக்க உதவியது.

கண்காட்சி இன்று நிறைவடையும்.

Urachal cancer எனப்படும் சிறுநீர்ப்பைப் புற்றுநோயால் அவதிப்படும் ஜுன்யாங் அதுவே இறுதி முயற்சியாக இருக்கலாம் என்று எண்ணுகிறார்.

"எனக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ளன... மற்றவர்களுக்கு அப்படி இல்லை... அவர்களும் தங்களுடைய கனவை நிறைவேற்றலாம்... அதற்கு முனையவேண்டும்," என்று ஜுன்யாங் சொன்னார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்