Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சம்பளத்தில் மாற்றமில்லை... ஆனால் 4 நாள் வேலை....வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க உதவுமா?

வாசிப்புநேரம் -

வாரத்தில் 4 நாள்கள் வேலை செய்வதன் மூலம் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தணிக்கமுடியும் என்று பிரிட்டனின் ஆய்வுக்குழு ஒன்று  தெரிவித்துள்ளது. 

6 மாதங்கள் நடைபெற்ற 4 நாள் வேலை வார முன்னோடித் திட்டத்தில் 73 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்றதாக The Guardian நாளேடு குறிப்பிட்டது. 

சம்பளத்தில் மாற்றமில்லாத 4 நாள் வேலை வாரங்களினால் குழந்தைப் பராமரிப்பில் 1,440 பவுண்டுகளையும் ($2,319), பயணச் செலவுகளில் 340 பவுண்டுகளையும் ($548) சேமிக்கலாம் என்று ஆய்வுக்குழு சொன்னது.  

பிரிட்டன் தற்போது பணவீக்கத்தின் மத்தியில் இருப்பதால் இந்தக் கொள்கை, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. 

சில நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்கினாலும் பெரும்பாலான நிறுவனங்கள்  நிரந்தரமாக இந்த திட்டத்தைக் கடைப்பிடிக்க முடிவெடுக்கலாம் என்று The Guardian அறிக்கை குறிப்பிட்டது. 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்