உயர் ரத்த அழுத்தம்... அதைச் சமாளிக்க 5 எளிமையான வழிகள்
வாசிப்புநேரம் -
உயர் ரத்த அழுத்தம்...
முன்பு வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு பிரச்சினை என்று கருதப்பட்டது.
ஆனால் 35 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது என அண்மைய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
"இதய நோய், பக்கவாதம், மூளைச் செயல்பாடு குறைதல் போன்றவற்றுக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக அமையக்கூடும். எனவே அதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகியுள்ளது என்கிறார் அமெரிக்க இதயநலச் சங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எடுவார்டோ சான்ச்செஸ் (Dr Eduardo Sanchez)
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
🩸 உங்கள் ரத்த அழுத்த அளவைத் தெரிந்து வைத்திருங்கள்
ரத்த அழுத்தம் சாதாரணமாக 120 mm Hg/ 80mm Hg எனும் அளவில் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அதற்கு மேல் இருந்தால் ரத்த நாளங்களில் சேதம் ஏற்படும்; சிறுநீரகங்கள், இதயம், மூளை போன்ற உறுப்புகள் பாதிக்கப்படலாம் என்று டாக்டர் சான்ச்செஸ் சொல்கிறார்.
ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது சிறந்தது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
🩸 உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை அறிதல்
உயர் ரத்த அழுத்தம் ஏற்படப் பல காரணங்கள் உண்டு.
சிலருக்கு அது மரபியல் ரீதியாக உண்டாகலாம். பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டிக்கோ மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டிருந்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
புகைப்பிடித்தல், உடற்பருமன், தூக்கமின்மை போன்றவையும் உயர் ரத்த அழுத்தம் உருவாகக் காரணமாகலாம்.
சில பெண்களுக்குக் கர்ப்பகாலத்திலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். அது தாய் சேய் இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
🩸 ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவைச் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளலாம் என 100க்கும் மேற்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.
குறிப்பாக potassium அதிகமுள்ள உணவு வகைகள் உடலில் உள்ள உப்பின் அளவையும் ரத்த நாளத்தில் நீரின் அளவையும் குறைக்க உதவுகின்றன.
வாழைப்பழம், அவக்காடோ (avocado), ஆரஞ்சு போன்ற பழங்களிலும் பசலைக்கீரை (spinach) போன்ற காய்கறிகளிலும் potassium பெருமளவு உள்ளது.
அதே நேரத்தில் உப்பு நிறைந்த உணவைக் குறைத்துக்கொள்வதும் மது அருந்தாமல் இருப்பதும் ரத்த அழுத்த உயர்வைத் தடுக்கும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
🩸 உடற்பயற்சி செய்யுங்கள்
ரத்த அழுத்தம் சீராக இருக்க உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. உடல் எடை குறைவதால் ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு கூடுகிறது.
மேலும் யோகாசனம், தியானம் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளும் கைகொடுக்கும் என்று டாக்டர் சான்ச்செஸ் சொல்கிறார்.
🩸 மருந்து சாப்பிட மறக்காதீர்கள்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்வதும் முக்கியம்.
சிலருக்குச் சில மருந்து வகைகளால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால் மருத்துவர்கள் அதைக் கவனித்து மாற்று மருந்துகளை வழங்குவர் என்பதால் அச்சம் தேவையில்லை என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : Others