பகலில் இதைச் செய்யுங்கள்...இரவில் நன்றாகத் தூங்கலாம்
This audio is generated by an AI tool.
நல்ல தூக்கம் எதைப் பொறுத்து இருக்கிறது?
தூங்குவதற்கு முன் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தா?
விளக்குகளை அணைப்பது, கைத்தொலைபேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது, அறையை குளிர்ச்சியாக வைப்பது, திரைச்சீலைகளை மூடுவது....
இவற்றைத்தான் நாம் நினைப்போம்.
இவை அனைத்தும் நல்ல உத்திகள்தான், ஆனால் பகல் நேரத்தில் எடுக்கும் முடிவுகளும் தூக்கத்திற்கு மிக முக்கியம் என்கிறார் தூக்க நிபுணர் ஜோசப் டிசியர்சியூஸ்கி. (Joseph Dzierzewski)
1. சூரிய ஒளி: தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் சூரிய ஒளி உடலில் படும்போது இரவில் நல்ல தூக்கம் வரும்.
2. சாப்பாட்டை நேரத்தோடும் அளவாக உண்பது: தினமும் மூன்று வேளை உணவை அதே நேரத்துக்குச் சாப்பிடுபவர்கள் இரவில் நன்றாகத் தூங்குவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
3. கேஃபீன் (Caffeine): ஒவ்வொருவரின் வளர்சிதை மாற்றமும் (Metabolism) வேறுபட்டிருக்கும். சிலருக்கு அது வேகமாக இருக்கும், வேறு சிலருக்கு மெதுவாக இருக்கும். மெதுவான வளர்சிதை கொண்டோரின் உடல்களில் கேஃபீன் அதிக நேரம் இருந்து அவர்களது தூக்கத்தைப் பாதிக்கலாம்.
4. தூக்கத்தை பாதிக்கக்கூடிய மருந்துகளை முன்கூட்டியே சாப்பிடுவது: தூங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னே மருந்து சாப்பிடுவது சிலரின் தூக்கத்தைக் கெடுக்கும். தூங்குவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவர்களின் உதவியை நாடலாம்.
5. தினமும் அதே நேரம் எழுந்திருப்பது: அலாரத்தை அலட்சியப்படுத்தாமல் உடனே எழுந்திருப்பது நம் உறக்கத்தை மேம்படுத்தலாம். வெவ்வேறு நேரங்களில் எழுந்தால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.
6. உடற்பயிற்சிக்கு நேரம் வகுத்துக்கொள்வது: வாரந்தோறும் போதுமான அளவு உடற்பயிற்சி (குறைந்தபட்சம் 150 நிமிடங்கள்) நல்ல உறக்கத்தோடு தொடர்புடையது. ஆனால் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது சிலரது தூக்கத்தைப் பாதிக்கலாம். ஆகவே நம் உடலுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.