Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டின் சுவரில் கண்டுபிடிக்கப்பட்ட 70 ஆண்டுப் பழைமையான French Fries... நல்ல நிலையில்!

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அண்மையில் வீட்டின் சுவரில் நுரைப்பஞ்சு கண்டுபிடிக்கப்பட்டது குறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உலகில் இன்னும் விநோதமான பொருள்களும் சுவர்களில் கண்டுபிடிக்கப்படுகின்றன போலத் தெரிகிறது!

அதுகுறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அமெரிக்காவின் இலனோய் (Illinois) மாநிலத்தில் வீட்டைப் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் தம்பதி..

அவர்கள் சுவர் ஒன்றின்மீது இருந்த paper fixture எனும் ஒட்டுவில்லையை அகற்றியபோது சுவரில் ஒரு பிளாஸ்டிக் பை திணிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தனர்.

இருவரும் உடனே பதறிப்போயினர்.

'பைக்குள் என்ன இருக்கும்?! மறைக்கப்பட்ட குற்றச் செயல் ஒன்றின் தடயமா? காவல்துறையை அழைக்கவேண்டுமா?' என்ற கேள்விகளே இருவருடைய மனங்களிலும் இருந்தன.


இருவரும் சுவரிலிருந்து பையை அகற்றினர்...கண்டது McDonald's விரைவு உணவகத்தின் பொட்டலம்...

அதுவும் 1950-களில் பயன்படுத்தப்பட்ட McDonald's பொட்டலம்...

பொட்டலத்தில் என்ன இருந்தது தெரியுமா? சாப்பிட்ட பர்கர்களின் உறை...French Fries என்ற பொரித்த உருளைக்கிழங்குக் கீற்றுகள் சில..

உருளைக்கிழங்குக் கீற்றுகளோ இன்னும் மொறுமொறுவென தென்பட்டதாக CNN குறிப்பிட்டது.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகும், கீற்றுகள் மக்கிப் போகாமல் இருப்பதைக் கண்டு தம்பதி வியந்தனர்.

அதிசயமான அந்த McDonald's பொட்டலத்தைத் தற்போது விற்க எண்ணுவதாக அவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்