Skip to main content
70 வயதில் மருத்துவர் பட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

70 வயதில் மருத்துவர் பட்டம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை 70 வயது தோ ஹோங் கெங் (Toh Hong Keng) நிரூபித்துள்ளார்.

உலகில் மருத்துவப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற ஆக வயதான மாணவர்களில் அவரும் ஒருவர்.

"இந்த வயதில் மருத்துவம் படிக்கப்போகிறாயா?" என்று முதலில் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டதாக டாக்டர் தோ கூறினார்.

வேலையிலிருந்து ஓய்வுபெற்ற அவர் மலேசியாவைச் சேர்ந்தவர். ஆனால் அவர் பல ஆண்டுகளாக ஹாங்காங்கில் வசிக்கிறார்.

பிலிப்பீன்ஸின் (Philippines) சீபு மாநிலத்தில் உள்ள Southwestern University PHINMA எனும் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவம் பயின்றார்.

"படிப்பது எப்போதும் சுலபமாக இல்லை. என்னுடைய வயதில் நினைவாற்றல், பார்வை, கேட்கும் திறன் ஆகியவை இளம் வயதினரைப்போல் நல்ல நிலையில் இருக்கமாட்டா" என்று டாக்டர் தோ CNN செய்தி ஊடகத்திடம் கூறினார்.

ஓய்வுபெறுவதற்கு முன் அவர் தொழில்நுட்ப விற்பனைத் துறையில் பணிபுரிந்தார்.

ஓய்வுபெற்ற பிறகு 5 ஆண்டுக்குத் தொடர்ந்து படித்தார்.

ஆனால் அது அவருக்குச் சுமுகமாக அமையவில்லை.

மூன்றாம் ஆண்டில் தேர்வில் சரியாகச் செய்யாததால் அவர் மீண்டும் அந்த ஆண்டைப் படிக்க வேண்டியிருந்தது.

இறுதி ஆண்டில் பொது, தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டிய நிலை.

சில வேளைகளில் 30 மணி நேரத்திற்குத் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி ஓடினார்.

இறுதியில் வெற்றியும் அடைந்தார்!
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்