Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

90 வயதில் எடைதூக்கும் பாட்டி

வாசிப்புநேரம் -
90 வயதில் எடைதூக்கும் பாட்டி

REUTERS/Ann Wang

வயது 90..

தூக்குவது 45 கிலோகிராம் எடை...

தைவானைச் சேர்ந்த செங் சென் சின் மேய்க்கு (Cheng Chen Chin-Mei) எடை தூக்குவது அன்றாட வாடிக்கை.

பார்க்கின்சன்ஸ் (Parkinson's) நோயால் அவதிப்படும் அவர் கடந்த ஆண்டிலிருந்து உடற்பயிற்சி செய்கிறார்.

உடலின் உறுதியை மேம்படுத்த எடைதூக்கும் பயிற்சி உதவுவதாக செங் சென் சொன்னார்.

"மூத்தோர் அனைவரும் எடைதூக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். கடுமையாக உழைக்கத் தேவையில்லை. ஆரோக்கியமாக இருப்போமே!" என்று அவர் கூறினார். 

செங் சென் நேற்று (21 டிசம்பர்) எடைதூக்கும் போட்டியில் பங்கேற்றார்.

அதில் கலந்துகொண்ட அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஆக மூத்தவருக்கு வயது 92.

தாத்தா, பாட்டிகளுக்கு ஆதரவளிக்க உற்றார் உறவினர் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

மூப்படையும் தைவான் சமூகத்தில் மூத்தோரைத் துடிப்பாக வைத்திருக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

தீவெங்கும் உடலுறுதி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்