93 வயது யோகா ஆசிரியர்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவில் 93 வயதில் யோகா வகுப்பு நடத்துகிறார் சாலமன் டெல்காடோ (Salomon Delgado) எனும் ஆடவர்.
இவரது புனைபெயர் ராகவன்.
கலிபோர்னியாவைச் (California) சேர்ந்த அவர் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களும் யோகா கற்றுக்கொடுக்கிறார்.
அவரின் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை நிறைந்தே இருக்கும் என்கிறது South China Morning Post.
மாணவர்களில் சிலர் அவரிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக யோகா பயின்று வருகின்றனர்.
30 வயதுக்குப் பிறகு யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். 70 வயதில் யோகா சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார்.
பிறருக்குக் கற்றுக்கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் இன்றளவும் தமக்குத் தாமே தினமும் குறைந்தது 25 நிமிடத்துக்கு யோகா பயிற்சியும் செய்துகொள்கிறார் இவர்.
உடலியல் (Physiology), உடற்கூறியல் (anatomy), ஏரோபிக்ஸ் (aerobics) , மூத்தோருக்கான உடற்பயிற்சி ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
"தினமும் கை கால்களை அசையுங்கள். விரும்பியதைச் செய்யுங்கள். ஆரோக்கியமாக முதுமையடைய இதுவே சிறந்தது" என்கிறார் சாலமன்.

ஆதாரம் : South China Morning Post