Skip to main content
AI
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

AI-க்கு ஆஸ்கார் கிடையாது

வாசிப்புநேரம் -
AI-க்கு ஆஸ்கார் கிடையாது

(கோப்புப் படம்: REUTERS/Shannon Stapleton)

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் நடிகர்கள் ஆஸ்கார் விருதுகளுக்குத் தகுதி பெற முடியாது.

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (The Academy of Motion Picture Arts and Sciences) இதனை அறிவித்துள்ளது.

AI பயன்பாட்டிற்கு எதிராக அந்த அமைப்பு எடுத்துள்ள புதிய நடவடிக்கைகளின்
ஒருபகுதியாக இது அமைகிறது.

புதிய விதிகளின்படி, உலகின் உயரிய திரைப்பட விருதுகளுக்கு மனித நடிகர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

அவர்களது AI வடிவங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டா.

அதேபோல் திரைக்கதைகள் சாட்போட்களால் (chatbot) எழுதப்படாமல், ஒரு மனிதரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் வால்கில்மர் (Val Kilmer) காலமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவரது AI வடிவம் ஒரு முன்னோட்டத்தில் திரையிடப்பட்டது.

அது வெளியான சில நாள்களில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு மறைந்த நடிகரின் குடும்பத்தினர் முழு ஆதரவு அளித்ததோடு, அவரது பழைய காணொளிக் கோப்புகளையும் வழங்கியிருந்தனர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்