உலகின் முதல் AI நடிகை
வாசிப்புநேரம் -
(படம்: Instagram/tillynorwood)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நடிகை உருவாக்கப்பட்டிருக்கிறது.
தில்லி நோவுட் (Tilly Norwood) என்பது அதன் பெயர்.
தயாரிப்பு நிறுவனங்கள் தில்லியைத் திரைப்படங்களில் நடிக்கவைக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாய் அதை உருவாக்கிய இலின் வான் டெர் வெல்டன் (Eline van der Velden) கூறியுள்ளார்.
ஆனால் தில்லிக்கு எதிராகச் சர்ச்சையும் எழுந்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்களுடன் வேலை செய்யாதீர்" என்று Scream திரைப்பட நடிகை மெலிசா பரெரா (Melissa Barrera) Instagram தளத்தில் பதிவிட்டிருந்தார்.
"செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடமிருந்து வேலை வாய்ப்புகளைத் திருடுகிறது," என்று Matilda திரைப்பட நடிகை மாரா வில்சன் (Mara Wilson) சொன்னார்.
"திரைப்படங்களிலுள்ள மனிதத் தன்மையைப் பறித்துவிடாதீர்" என்று எமிலி பிலன்ட் (Emily Blunt) நேர்காணலில் கூறினார்.
அவர்களின் கூற்றுகளுக்குத் திருவாட்டி இலின் தில்லியின் Instagram பக்கத்தில் பதிலளித்தார்.
"செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடமிருந்து கலையை உருவாக்கும் வாய்ப்புகளைத் திருடுவதில்லை. மாறாக, புத்தாக்கத்திறனை வளர்க்க அது உதவும்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

ஆதாரம் : AFP