Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மனிதர் தயாரித்த இசையா? AI தயாரித்த இசையா? வித்தியாசம் தெரியவில்லை என்கின்றனர் பலர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செயற்கை நுண்ணறிவும் இப்போது இசை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

எந்த இசை மனிதர்களால் தயாரிக்கப்பட்டது? எந்த இசை செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்டது? வித்தியாசத்தை மக்களால் கண்டறிய முடிகிறதா என்பதை ஆராய Ipsos நிறுவனம் ஆய்வு நடத்தியது.

பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நெதர்லந்து, அமெரிக்கா ஆகிய 8 நாடுகளில் சென்ற மாதம் ஆய்வு நடத்தப்பட்டது.

9,000 பேர் ஆய்வில் பங்கேற்றனர். அவர்களில் 97 விழுக்காட்டினரால் வேறுபாடுகளைக் கண்டறிய முடியவில்லை என்று தெரியவந்தது.

ஆய்வில் பங்கெடுத்த பாதிக்கும் மேற்பட்டோர் வேறுபாடுகள் தெரியாமல் இருப்பது வருத்தமளிப்பதாகக் கூறினர்.

செயற்கை நுண்ணறிவை அதிகமாகப் பயன்படுத்தும்போது இசையின் தரம் குறையும் என்று 51 விழுக்காட்டினர் நம்புவதாக ஆய்வில் தெரியவந்தது.

இசைப் படைப்பில் புத்தாக்கம் குறைந்துவிடலாம் என்று கிட்டத்தட்ட 67 விழுக்காட்டினர் பதிலளித்தனர்.

எந்த இசை செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்டது என்பதை நிறுவனங்கள் குறிப்பிடவேண்டும் என்று 80 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், இசைப் படைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியிருந்தால் அதனை வெளிப்படுத்தக் கலைஞர்களை ஊக்குவிப்பதாக இசை நிறுவனம் Spotify தெரிவித்தது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்