Skip to main content
சீன தெய்வங்கள் விமானத்தில் பயணம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீன தெய்வங்கள் விமானத்தில் பயணம்!

வாசிப்புநேரம் -
சீனாவின் சியாமென் (Xiamen) நகரிலிருந்து தைவானுக்கு 2 சீன தெய்வச் சிலைகள் விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளன.

இருபகுதிகளுக்கு இடையே இருக்கும் கலாசாரப் பரிமாற்றத்தை அது குறிக்கிறது.

அந்தக் கடவுளின் பெயர் மாஸு (Mazu).

அப்படி என்றால் கடலின் கடவுள் என்று அர்த்தம்.

சிலைகள் விமானத்தில் செல்ல சியாமென் ஏர்லைன்ஸ் சிறப்பு அனுமதிச்சீட்டுகளை வழங்கியது.

லின் மோ எனும் பெயரின்கீழ் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

சென்ற மாதம் 29ஆம் தேதி சிலைகள் விமானத்தில் பயணம் செய்தன.

விமானச் சிப்பந்திகள் சிலைகளைக் கவனத்தோடு தூக்கிச்செல்வது காணொளிகளாகப் பகிரப்பட்டன.

பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்க சிறப்பு இருக்கை வாருக்குத் தயார் செய்யப்பட்டது.

சிலைகள் பெரிதாக இருந்ததால் விமான நிலையம், சுங்கச்சாவடிகள், குடிநுழைவு ஆகியவற்றோடு முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே இருக்கும் தொடர்பைச் சிலைகள் வலுப்படுத்தும் என்று நம்புவதாக இணையவாசிகள் சிலர் குறிப்பிட்டனர்.
ஆதாரம் : South China Morning Post

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்