வாழ்வியல் செய்தியில் மட்டும்
Wired earpiece, Airpods - இசை கேட்க எது பாதுகாப்பானது?
இரண்டு வகைக் காதொலிக் கருவிகள் உள்ளன.
இரண்டில் எது பாதுகாப்பானது? மேலும் அறிய ஒலிப்பதிவு நிபுணர் விவேகானந்த் மதியழகனிடம் பேசியது 'செய்தி'.
Wired earpiece, airpods இரண்டுமே காதுகளுக்கு அபாயமானவை என்றார் திரு விவேக்.
இசையின் ஒலியளவு, அதைக் கேட்கும் நேரம் ஆகியவற்றுக்கு ஏற்பக் காதுகள் பாதிக்கப்படலாம். இரண்டு வகை காதொலிக் கருவிகளும் காதுக்குள் அணியப்படுகின்றன. அதனால் காதின் உட்புறம் முழுமையாக மூடப்படுகிறது. ஒலியளவு, அதைக் கேட்கும் நேரம் ஆகியவற்றைக் கூர்ந்து கண்காணிக்கவேண்டும் என்றார் அவர்.
ஆயினும் காதொலிக் கருவிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு வழி உள்ளது என்று அவர் சொன்னார்.
அனுமதிக்கப்படும் அதிகட்பட்ச ஒலியளவுக்கு ஏற்பக் காதொலிக் கருவியை ஒரு நாளில் அதிகபட்சம் அரை மணி நேரம் பயன்படுத்தலாம். ஆனால், ஒலியளவு 60 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.