Skip to main content
அல்பேனியாவின் ஆகச் சிறிய குர்ஆன்... அதன் வரலாறு என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

அல்பேனியாவின் ஆகச் சிறிய குர்ஆன்... அதன் வரலாறு என்ன?

வாசிப்புநேரம் -


தபால்தலை அளவில் தான் இருக்கும்.

அகலம் 2 சென்டிமீட்டர்... 
பருமன் ஒரு சென்டிமீட்டர்...

பூதக்கண்ணாடி வைத்துத்தான் குர்ஆனை ஓத முடியும். 

உள்ளங்கையில் வைத்தால் பெரிதாக வெளியே தெரியாத  சின்னஞ்சிறு திருக்குர்ஆனை  அல்பேனியாவின் மரியோ புருஷியின் (Mario Prushi) குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாகப் பத்திரப்படுத்தி வருகின்றனர். 

உலகின் ஆகச் சிறிய குர்ஆன்களில் ஒன்றான அது வெள்ளிப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது.

900 பக்கங்கள் கொண்ட அந்த குர்ஆன் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது.

திரு. புருஷியின் கொள்ளுத் தாத்தாவும் பாட்டியும் கொசோவோவின் ஜாகொவிசா பகுதியில் வீடு கட்டுவதற்காகப் பூமியைத் தோண்டிக்கொண்டிருந்தனர்.

அப்போது பதப்படுத்தப்பட்ட ஓர் ஆடவரின் உடலை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்தச் சிறிய குர்ஆன் அவரின் மார்பில் இருந்தது. பிறகு  அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.

மிகச்சிறிய குர்ஆனை வாங்குவதற்கு அருங்காட்சியகங்கள் மட்டுமல்ல பலரும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அதை விற்கும் எண்ணமே இல்லை என்றார் திரு. புருஷி.

-AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்