Skip to main content
தோண்டத் தோண்டத் தங்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

தோண்டத் தோண்டத் தங்கம்

வாசிப்புநேரம் -
தோண்டத் தோண்டத் தங்கம்
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவில் ஒருவரின் பொழுதுபோக்கு தங்கம் தேடுவது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் டிபூபுரா நகருக்கு அருகே அவர் பல நாளாய்த் தேடினார்.

ஒரு நாள் அவருக்கு நன்னாள்; பொன்னாள்.

அன்று அவருக்கு 200,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள பெரிய தங்கக்கட்டி கிடைத்தது என்று ABC News தெரிவித்துள்ளது.

அடையாளம் வெளியிட விரும்பாத அவர் உலோகங்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்திப் பல நாட்களாய்த் தங்கம் தேடியிருக்கிறார்.

கருவியிலிருந்து கிடைத்த மெல்லிய சமிக்ஞையைப் புறந்தள்ளி அந்த இடத்தைக் கடக்க முயன்றார்.

பிறகு மனம் மாறி சமிக்ஞை கிடைத்த இடத்தில் தோண்டிப் பார்க்க முடிவெடுத்தார்.

அடித்தது அதிர்ஷ்டம்.... அவருக்குக் கிடைத்தது சுமார் ஒன்றே கால் கிலோகிராம் தங்கக் கட்டி.

அதில் சுமார் 940 கிராம் "சொக்கத் தங்கம்" இருப்பதாகக் கூறப்படுகிறது.

கண்டெடுத்த தங்கக் கட்டிக்கு "Tibooburra Spud" என்று பெயர் சூட்டிய அவர் அதைத் தங்கம் சேகரிக்கும் ஒருவருக்கு விற்க விரும்புகிறார்.

மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? என்றபோது “தொடர்ந்து நடப்போம்...தொடர்ந்து தேடுவோம்...தொடர்ந்து தோண்டுவோம்...” என்றார்.

தங்கம் கிடைக்கும் என்றால் தங்கமாய்த் தேடலாம்...தவறில்லை...
ஆதாரம் : Others/ABC News

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்