ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளின் பரப்பளவிற்கு இணையான பகுதி அமசான் காட்டில் அழிந்துவிட்டது
வாசிப்புநேரம் -

(படம்: EVARISTO SA / AFP)
ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய 2 நாடுகளின் மொத்தப் பரப்பளவிற்கு இணையான பகுதி அமசான் (Amazon) மழைக்காட்டில் அழிந்துவிட்டது.
கடந்த 40 ஆண்டுகளாக நடத்தப்படும் காடழிப்பு நடவடிக்கைகளால் அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் தென் அமெரிக்கா முழுதும் வறட்சி, காட்டுத்தீ ஏற்படுவதாக நிபுணர்கள் கூறினர்.
உலகின் ஆகப் பெரிய காடு அமசான் மழைக்காடு.
அது 9 நாடுகளில் படர்ந்துள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் அமசான் மழைக்காட்டிற்குப் பெரும் பங்கு உள்ளது.
பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும் கரியமில வாயுவை உறிஞ்சும் திறன் அதற்கு உள்ளது.
ஆனால் இந்த ஆண்டு (2024) ஏற்பட்டு வரும் காட்டுத்தீச் சம்பவங்கள் அதிக அளவில் கரியமில வாயுவை வளிமண்டலத்திற்குள் வெளியேற்றியுள்ளது.
இந்த நிலையில் காட்டின் பகுதி அழிந்துவருவது பருவநிலை மாற்றத்தை நிச்சயம் பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஆதாரம் : Others