அமோனியா - அபாயங்கள் என்னென்ன?
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Wallace Woon)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜூரோங்கில் நேற்று அமோனியா (Ammonia) கசிந்ததால் இருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அமோனியா என்றால் என்ன? அது ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னென்ன?
அமோனியா ஒரு நிறமற்ற வாயு.
தொழில்துறைத் தேவைகளுக்கு அது அதிகம் பயன்படும்.
குளிர்சாதனப் பெட்டிகள், வேளாண் உரங்கள் போன்றவற்றில் அமோனியா இருக்கும்.
அமோனியா கசிந்தால் கடும் நெடி வீசும்.
அமோனியா ஏற்படுத்தும் உடல்நலச் சிக்கல்கள் யாவை?
📍 கண் எரிச்சல்
📍 மங்கலான கண் பார்வை
📍 ஓயாத இருமல்
📍 மூச்சுத் திணறல்
📍 நெஞ்சு வலி
அமோனியா கசிவில் சிக்கியவர்கள் என்ன செய்யவேண்டும்?
பாதிக்கப்பட்டவர்களின் ஆடையில் அமோனியா படரலாம்.
அதனால் அவர்கள் உடனே தங்கள் ஆடையை மாற்றவேண்டும்.
10 முதல் 15 நிமிடங்கள் வரை கண்களைக் கழுவவேண்டும்.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி வீட்டில் இருக்கும் கண் மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
சிறார், முதியோர், ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் போன்றோர் இலேசான அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும்.

ஆதாரம் : AGENCIES