Skip to main content
பெருவின் அமஸான் காட்டில் 27 புதிய வகை விலங்குகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

பெருவின் அமஸான் காட்டில் 27 புதிய வகை விலங்குகள்

வாசிப்புநேரம் -
பெருவின் அமஸான் காட்டில் 27 புதிய வகை விலங்குகள்

(படம்: Reuters/Conservation International/Ronald Diaz)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பெருவின் அமஸான் (Amazon) காட்டில் 27 புதிய வகை விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு ஆய்வுப் பயணித்தின்போது அவை கண்டுபிடிக்கப்பட்டதாக Conservation International அமைப்பு கூறியது.

நீர்வாழ் பூச்சிகளை உட்கொள்ளும் எலி...

எட்டு வகை மீன்கள்...

10 வகை வண்ணத்துப்பூச்சிகள்...

சிறிய அணில்...

உட்பட மேலும் பல புதிய வகை விலங்குகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அல்டோ மாயோ (Alto Mayo) என்கிற பாதுகாக்கப்படும் பகுதியில் அவை இருந்தன.

2022ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணத்தில் 13 விஞ்ஞானிகள், உள்ளூர் தொழில்நுட்ப வல்லுநர்கள், பழங்குடி மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

38 நாள் நீடித்த அந்தப் பயணத்தின்போது 2,046 வகை விலங்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவற்றில் 49 விலங்கு வகைகள் அபாயத்தை எதிர்நோக்குவதாக வகைப்படுத்தப்பட்டன.

காட்டிலுள்ள அத்தகைய பகுதிகளைப் பாதுகாக்கவேண்டும் என்று அமைப்பின் தலைவர் ஒருவர் கூறினார்.

இல்லையெனில் அவை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காமல்போக நிறைய வாய்ப்பு இருப்பதாக அவர் சொன்னார்.
 
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்