அன்றும் இன்றும்: தென்கிழக்கு ஆசியாவிலேயே முன்னணிப் புகைப்படக்காரர்
அன்றும் இன்றும்: தென்கிழக்கு ஆசியாவிலேயே முன்னணிப் புகைப்படக்காரர்
சரவாக்கில் பிறந்த திரு வோங் கென் ஃபூ தென்கிழக்கு ஆசியாவின் முன்னணிப் புகைப்படக் கலைஞர்களில் ஒருவர்.
அவரின் புகைப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.
பல வருடங்களாக சரவாக்கின் காடுகளையும், அங்கு வசித்து வந்த மக்களையும் புகைப்படம் எடுக்கும் அவருக்குத் திறந்த வெளியில் புகைப்படங்கள் எடுக்கப் பிடிக்கும்.
1946-இலிருந்து 1970-கள் வரை சிங்கப்பூரில் அவர் எடுத்த 2,000 புகைப்படங்கள் சிங்கப்பூர் தேசியக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் பயிற்சி பெற திரு வோங் 1936-இல் சிங்கப்பூருக்கு வந்தார்.
இங்கு எந்த வேலையும் கிடைக்காததால் அவர் சீனாவிற்கே திரும்பி விட்டார். பல இன்னல்களைத் தாண்டி இவர் பிரபலமானார்.